ABISHANA
Thursday, July 5, 2012
முயற்சி
முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல ,
நீ நினைத்ததை
முடிக்கும் வரை ..
நண்பர்கள்
உலகம் என்னை பார்த்து கேட்டது
உனக்கு எத்தனை நண்பர்கள் என்று ,
பாவம் அதற்கு என்ன தெரியும்
என் நண்பர்கள் தான்
என் உலகம் என்று !
நம்பிக்கை
நம்பிக்கை வெற்றியோடு வரும்...!
ஆனால், வெற்றி
நம்பிக்கை உள்ளவரிடம் மட்டுமே வரும்... !
காதல்
பேசுவதற்கு வார்த்தைகள்
அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!
வாழ்க்கை
நாம் வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது...
அது தான் வாழ்க்கை...!
கண்ணீர்...
முதியோர் இல்லத்தில்
ஒரு தாயின் கண்ணீர்...!
நீ இருக்க ஒரு கருவறை
இருந்தது என் வயிற்றில்...
நான் இருக்க ஒரு இருட்டறை
கூடவா இல்லை...
உன் வீட்டில்.
ஜென்மம்...
பார்க்க கண்கள் வேண்டும்...
சுவாசிக்க இதயம் வேண்டும்...
உன்னை போல நட்பு கிடைக்க
இன்னொரு
ஜென்மம் வேண்டும் .
அழகு...
கல்லறை கூட
அழகாகத் தெரியும்
உண்மையான காதல்
அங்கு உறங்கும் போது...
மறந்து...
என் முன்னால்
எப்பொழுதும் சிரிக்கும்
என் நண்பன்
முதல் முறையாக
அழுகிறான்...!
எழுந்து துடைக்க நினைக்கிறேன்...
நான்இறந்து
கிடக்கிறேன்... என்பதையும்
மறந்து...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)